Sunday, January 24, 2010

காட்டில் ஒரு கல்யணம்

கருங்குருவி வீட்டில் ஒரு கல்யணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம் கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து பந்தல் வேலை பார்ததாம்

No comments:

Post a Comment